19
ஜெனீவாவில் பொதி குண்டு வைத்திருந்த சந்தேகத்தின் பெயரில் ஒருவரை காவல்துறையினர் கைது செய்தனர்.
இன்று புதன்கிழமை காலை ஜெனீவாவில் பார்சல் குண்டுத் தாக்குதல்கள் தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டார். பணம் பறிப்பதற்காக பார்சல் குண்டுகளை அவர் தயாரித்ததாக சந்தேகிக்கப்படுகிறது.
சந்தேகநபர் 60 வயதுடையவர் எனக் கூறப்படுகிறது.
கடந்த நவம்பரில் ஜெனீவாவின் கிரேன்ஜ்-கனால் மாவட்டத்தில் நடந்த பொதிகுண்டுத் தாக்குதலில் ஒரு பெண் படுகாயமடைந்தார்.
கடந்த ஆகஸ்ட் மாதம் ஜெனீவாவில் இதேபோன்ற ஒரு சம்பவம் நிகழ்ந்தது. செயிண்ட்-ஜீன் மாவட்டத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் கதவுக்கு வெளியே குப்பைப் பையை எடுத்தபோது ஒருவர் காயமடைந்தார்.
சுவிட்சர்லாந்தின் அட்டர்னி ஜெனரல் அலுவலகம் இந்த வழக்கை எடுத்துக் கொண்டது, இன்னும் விசாரணை நடந்து வருகிறது.