Home யாழ்ப்பாணம் குருசுவாமி கோடிகளில் பெற்றார்:விந்தன்!

குருசுவாமி கோடிகளில் பெற்றார்:விந்தன்!

by ilankai

குருசுவாமி சுரேந்திரன் ஜனாதிபதி தேர்தலில் விநோநோகராதலிங்கம் பெயரில் கோடிகளில் லஞ்சம் பெற்றதாக விந்தன் கனகரட்ணம் குற்றஞ்சுமத்தியுள்ளார்.

தமிழீழம் கேட்ட அரசியல்வாதிகள் வடக்கிற்கு நிதி ஒதுக்கியமைக்கு கை தட்டுவது மக்களுக்கு துரோகம் இழைக்கும் அரசியலாகுமெனவும் விந்தன் கனகரட்ணம் தெரிவித்துள்ளார்.

யாழ் ஊடக அமையத்தில் இன்று புதன்கிழமை நடைபெற்ற ஊடகசந்திப்பில் கருத்து வெளியிடுகையில் தற்போதைய அரசாங்கம் அரசியல் கைதிகளை விடுதலை செய்ததா? காணாமல் போன மக்களை கண்டுபிடித்து கொடுத்ததா? அதேநேரம், பயங்கரவாத தடைசட்டத்தை நீக்கினார்களா? அல்லது நில ஆக்கிரமிப்பை நிறுத்திக் கொண்டார்களா? இல்லையெனவும் விந்தன் கனகரட்ணம் மேலும் தெரிவித்துள்ளார்.

அனுர அரசு வடக்கின் அபிவிருத்திக்காக நிதி ஒதுக்கியுள்ளது.அதற்காக நிதி ஒதுக்கியமைக்கு கை தட்டுவது மக்களுக்கு துரோகம் இழைக்கும் அரசியலாகும்.

தமிழீழ விடுதலை இயக்கம் போலி தமிழ் தேசியத்தை பேசி மதுபான அனுமதிப்பத்திரங்கள் பெற்றதும் கோடிகளில் மோசடி செய்ததும்  மட்டுமே சாதனையெனவும் விந்தன் கனகரட்ணம் மேலும் தெரிவித்துள்ளார்.

முன்னதாக நேற்று முன்தினம் தமிழீழ விடுதலை இயக்க முக்கியஸ்தர் விந்தன் கருணாகரன் தனது மகன் சகிதம் தமிழரசு கட்சி பக்கம் பாய்ந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Articles