Home கிளிநொச்சி விந்தனும் வந்தார் : தனித்து தமிழரசு?

விந்தனும் வந்தார் : தனித்து தமிழரசு?

by ilankai

உள்ளூராட்சி சபை தேர்தலில் போட்டியிடுவதற்காக இலங்கைத் தமிழரசுக் கட்சி  யாழ்ப்பாணத்தில் தனது கட்டுப்பணம் செலுத்தியுள்ளது.

இன்று செவ்வாய்கிழமை மதியம் யாழ்.தேர்தல்கள் அலுவலகத்தில் கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தில் உள்ள 17 உள்ளூராட்சி சபைகளுக்கும், இலங்கை தமிழ் அரசுக் கட்சின் பதில் பொதுச் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் கட்டுப்பணத்தினை செலுத்தியுள்ளார்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான கட்டுப்பணம் செலுத்தும் நடவடிக்கை எதிர்வரும் 19ஆம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்படவுள்ளது.

இதனிடையே தமிழீழ விடுதலை இயக்க முன்னாள் முக்கியஸ்தரும் வடமாகாண முன்னாள் உறுப்பினருமான விந்தன் கனகரட்னம் தமிழரசுக் கட்சியில் இணைந்து கொண்டுள்ளார்.

விந்தன் கனகரட்னத்துக்கும் செல்வம் அடைக்கலநாதன் தலைமையிலான கட்சிக்கும் இடையில் அண்மைக்காலமாக முரண்பாடுகள் ஏற்பட்டு வந்திருந்தன.

இந்நிலையில், தமிழரசுக் கட்சியின் பதில் தலைவர் சிவஞானம் முன்னிலையில் தமிழரசுக் கட்சியில் தனது மகனுடன் இணைந்து கட்சியின் உறுப்புரிமையை விந்தன் கனகரட்ணம் பெற்றுக்கொண்டுள்ளார்;.

வேட்பாளர் பட்டியலில் இளைஞர்களிற்கும் இடம் வழங்க வேண்டுமென்ற நிபந்தiனையின் கீழ் நெடுந்தீவு பிரதேசசபையை இலக்கு வைத்து தனது மகனை களமிறக்க விந்தன் கனகரட்னம் திடீரென தமிழரசுக் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டுள்ளார்.

Related Articles