Home வவுனியா முன்னணியின் சாம்பார் தயார்!

முன்னணியின் சாம்பார் தயார்!

by ilankai

தனித்து நின்று ஆட்சி பிடிக்கும் கதைகளை மறந்து தமிழ் தேசிய மக்கள் முன்னணி சாம்பார் கூட்டுக்கு தயாராகியுள்ளது.

தமிழரசு மற்றும் தமிழ் தேசிய ஜனநாயக கூட்டமைப்பிலிருந்து வெளியேறிய தரப்புக்கள் முன்னணியுடன் கூட்டிற்கு தயராகிவருகின்றன.

இதனிடையே  வவுனியா மாநகரசபை உள்ளிட்ட நான்கு சபைகளிலும் போட்டியிட தமிழ் தேசிய மக்கள் முன்னனி  வவுனியா மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலகத்தில் கட்டுப்பணம் செலுத்தியது. 

நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடும் கட்சிகள் எதிர்வரும் 19 ஆம் திகதி வரை கட்டுப்பணம் செலுத்த முடியும். 

அதற்கமைவாக, வவுனியா மாவட்டத்தின் வவுனியா மாநகரசபை, வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை, வவுனியா வடக்கு பிரதேச சபை, வெண்கல செட்டிகுளம் பிரதேச சபை ஆகிய நான்கு உள்ளூராட்சி மன்றங்களிலும் தமிழ் தேசிய மக்கள் முன்னனி அதன் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் சைக்கிள் சின்னத்தில் தனித்து போட்டியிடவுள்ளதாக கூறப்படுகின்றனர். 

Related Articles