17
யாழில். ஹெரோயினுடன் கைதான இளைஞன் விளக்கமறியலில்
ஆதீரா Monday, March 10, 2025 யாழ்ப்பாணம்
யாழ்ப்பாணத்தில் ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட இளைஞன் நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
ஆனைக்கோட்டை பகுதியில் 2 கிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் 28 வயது இளைஞன் மானிப்பாய் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டான்.
கைது செய்யப்பட்ட இளைஞனை விசாரணைகளின் பின்னர் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை மல்லாகம் நீதாவனின் முன்னிலையில் முற்படுத்திய போது , இளைஞனை 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டது.
Related Posts
யாழ்ப்பாணம்
Post a Comment