நோய்களை குணப்படுத்துவதென்ற பேரில் இந்தியாவிலிருந்து வருகை தந்து யாழ்ப்பாணம் மாதகல் பகுதியில் தீவிர மதபிரசாரத்தில் ஈடுபட்ட குழுவினர் மற்றும் சுற்றுலா விசா நடைமுறைகைள மீறிய குற்றச்சாட்டில் இந்தியாவுக்கு நாடுகடத்தப்பட்டனர்.
ஈழம் சிவசேனை அமைப்பின் புகாரையடுத்து குழுவினரை குடிவரவு குடியகல்வுத்துறை அதிகாரிகள் கைது செய்திருந்தனர்.
நேற்று முன்தினம் இரண்டு மதபோதகர்கள் காவல்துறையால்; கைது செய்யப்பட்டு விசாரணைகளின் பின்னர் கட்டுநாயக்கா விமான நிலையம் ஊடாக நாடுகடத்தப்பட்டனர்.
அதேவேளை யாழ்ப்பணத்தில் இந்து ஆலயங்களில் சிற்பவேலைகளில் ஈடுபட்டிருந்த இந்தியர்கள் எட்டுபேர் கைதாகியுள்ளனர்.அவர்களை போன்று யாழில் உள்ள உணவகங்களில் பணிபுரிந்த ஐவரும் கைது செய்யப்பட்ட நிலையில் கைதான 13 இந்தியப் பிரஜைகள் யாழ்ப்பாணம் விமான நிலையம் ஊடாக சென்னைக்கு நாடுகடத்தப்பட்டுள்ளனர்.
இதனிடையே கடலில் வைத்து அத்துமீறி தொழிலில் ஈடுபட்டதாக கைதான இந்திய மீனவர்கள் 19பேர் தொடர்ந்தும் சிறைகளில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.