Home முதன்மைச் செய்திகள் ஜெர்மனியில்13 விமான நிலையங்களில் வேலை நிறுத்தம்: பல விமானங்கள் இரத்தாகின!

ஜெர்மனியில்13 விமான நிலையங்களில் வேலை நிறுத்தம்: பல விமானங்கள் இரத்தாகின!

by ilankai

யேர்மனி முழுவதும் உள்ள விமான நிலையங்களில் வேலைநிறுத்தங்கள் நடவடிக்கைகளை கிட்டத்தட்ட நிறுத்தியுள்ளன. ஏனெனில் சேவை ஊழியர்கள், தரை ஊழியர்கள் மற்றும் விமானப் பாதுகாப்புப் பணியாளர்கள் 24 மணி நேர வெளிநடப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கிட்டத்தட்ட 2.5 மில்லியன் பொதுத்துறை ஊழியர்களுக்கு கூட்டு ஊதிய ஒப்பந்தத்தை கோரி வெர்டி தொழிற்சங்கம் போராடி வருகிறது. இரண்டாவது சுற்றுப் பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததை அடுத்து இன்று திங்கட்கிழமை வேலைநிறுத்தங்கள் நடந்துள்ளன.

8% சம்பள உயர்வு, அதிக போனஸ் மற்றும் மூன்று கூடுதல் நாட்கள் விடுமுறை உள்ளிட்ட வெர்டியின் திட்டங்கள் நிதி ரீதியாக சாத்தியமானவை அல்ல என்று மத்திய அரசும் உள்ளூர் நகராட்சிகளும் கூறியுள்ளன.

யேர்மனியின் பரபரப்பான விமான நிலையமான பிராங்பேர்ட்டின் செயல்பாடுகள் பாதிக்கப்பட்டன. மியூனிக், ஸ்டட்கார்ட், கொலோன்/பான், டுசெல்டார்ஃப், டார்ட்மண்ட், ஹனோவர், பிரெமன், ஹாம்பர்க், பெர்லின்-பிராண்டன்பர்க் மற்றும் லீப்ஜிக்-ஹாலே போன்ற விமான நிலையங்களில் வேலை நிறுத்தப் போராட்டங்கள் நடக்கின்றன.

பிராங்பேர்ட் விமான நிலையத்தில், அன்றைய தினம் திட்டமிடப்பட்ட 1,116 புறப்பாடுகள் மற்றும் தரையிறக்கங்களில் 1,054 இரத்து செய்யப்பட்டுள்ளன.

பெர்லின் விமான நிலையத்தின் வழக்கமான புறப்பாடுகள் மற்றும் வருகைகள் அனைத்தும் ரஇத்து செய்யப்பட்டன. அதே நேரத்தில் ஹாம்பர்க் விமான நிலையம் புறப்பாடுகள் சாத்தியமில்லை என்று கூறியது.

வழக்கமான பயணிகள் சேவை இல்லை என்று கொலோன்/பான் விமான நிலையம் கூறியது. மேலும் மியூனிக் விமான நிலையம் பயணிகளுக்கு மிகவும் குறைக்கப்பட்ட விமான அட்டவணையை” எதிர்பார்க்குமாறு அறிவுறுத்தியது.

இந்த வேலைநிறுத்தங்கள் சுமார் 510,000 பயணிகளைப் பாதிக்கும் என்று விமான நிலைய சங்கம் தெரிவித்துள்ளது.

பாதிக்கப்பட்ட விமான நிலையங்களுக்குச் செல்லும் மற்றும் புறப்படும் அனைத்து விமானங்களிலும் தாமதங்கள் மற்றும் விரிவான ரத்துசெய்தல்கள் இருக்கும் என்று யேர்மன் விமானப் போக்குவரத்துக் குழுவான லுஃப்தான்சா தெரிவித்துள்ளது.

ஹாம்பர்க் விமான நிலைய நிலையமே முன்னறிவிப்பு இல்லாம் தொழிலாளர்கள்  வெளிநடப்பு செய்ததால் முதலில் பாதிக்கப்பட்டது.  மேலும் நேற்றுஞாயிற்றுக்கிழமை விமான நிலையத்திற்குச் செல்லும் மற்றும் புறப்படும் கிட்டத்தட்ட அனைத்து விமானங்களும் இரத்து செய்யப்பட்டன.

அடுத்த சுற்று ஊதிய பேச்சுவார்த்தைகள் வெள்ளிக்கிழமை தலைநகர் பெர்லினுக்கு அருகிலுள்ள போட்ஸ்டாமில் திட்டமிடப்பட்டன.

Related Articles