Home மன்னார் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு களமிறங்கியது!

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு களமிறங்கியது!

by ilankai

எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு   வடகிழக்கெங்கும் கூட்டாக போட்டியிடவுள்ளதாக அறிவித்துள்ளது.

இதனிடையே இன்று திங்கட்கிழமை மன்னார் மாவட்டத்தில் போட்டியிட  மாவட்ட தேர்தல் அலுவலகத்தில் கட்டுப்பணத்தை ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு  செலுத்தியுள்ளது.

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனின் செயலாளரும், ரெலோ கட்சியின் மன்னார் மாவட்ட அமைப்பாளருமான டானியல் வசந்தன்  தலைமையில் கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளார்.

மன்னார் மாவட்டத்தில் மன்னார் நகர சபை ,நானாட்டான் பிரதேச சபை, முசலி பிரதேச சபை ,மாந்தை மேற்கு பிரதேச சபை ஆகிய உள்ளூராட்சி மன்றங்களுக்கான கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளனர்.

மன்னார் பிரதேச சபை  தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை இடம்பெற்று வருகின்ற மையினால்  மன்னார் பிரதேச சபைக்கான தேர்தல் குறித்து உத்தியோக பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.

எனினும் பூநகரி பிரதேசசபைக்கான தேர்தல் அறிவிப்பு இன்றைய தினம் விடுக்கப்பட்டமையால் மன்னார் பிரதேசசபை தேர்தல் அறிவிப்பும் வெளியாகலாமென எதிர்பார்க்கப்படுகின்றது.

Related Articles