Home முதன்மைச் செய்திகள் வவுனியாவில் தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டம்

வவுனியாவில் தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டம்

by ilankai

இலங்கைத் தமிழரசுக்கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் இன்று ஞாயிற்றுக்கிழமை (09) வவுனியாவில் நடைபெறவுள்ளது.

இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தலைமையில் இந்தக் கூட்டம் நடைபெறவுள்ளதோடு உள்ளுராட்சி மன்றங்களுக்கான வேட்புமனுக்கள் சமர்ப்பிப்பு, வேட்பாளர்கள் தெரிவு மற்றும் தேர்தலைக் கையாளுதல் உள்ளிட்ட விடயங்கள் சம்பந்தமாக கலந்துரையாடப்படவுள்ளது.

எனினும், நிகழ்ச்சி நிரலில் ஏனைய விடயங்கள் என்று தலைப்பிடப்பட்டுள்ள நிலையில் மத்திய செயற்குழு அங்கத்தவர்கள் உட்பட ஒழுக்காற்று நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்பட்டவர்கள் சம்பந்தமாகவும் உரையாடப்படவுள்ளது.

Related Articles