உயிர்த்த ஞாயிறு தாக்குல் தொடர்பில் பல்வேறு கருத்துக்களை வெளியிட்டு வரும் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு எதிராக குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடொன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.
உயிர்த்த ஞாயிறு தாக்குல் தொடர்பில் பல்வேறு கருத்துக்களை வெளியிட்டு வரும் நிலையில், அவரின் கருத்து தொடர்பில் உரிய விசாரணைகளை முன்னெடுக்குமாறு வலியுறுத்தி குறித்த முறைப்பாடளிக்கப்பட்டுள்ளது.
குறித்த முறைப்பாட்டை இலஞ்ச ஊழல் வீண்விரயத்துக்கு எதிரான பிரஜைகள் அமைப்பினர் நேற்று பதிவு செய்துள்ளனர்.
அண்மையில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது, உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திரதாரி யார் என்பது மற்றும் அதனுடன் தொடர்புடைய பல விடயங்களை தாம் அறிந்திருப்பதாக ஞானசார தேரர் தெரிவித்திருந்தார்.
அத்துடன் இந்த விடயங்களை ஜனாதிபதி உள்ளிட்ட உயர் அதிகாரிகளுக்கு தாம் வெளிப்படுத்த தயாராக இருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையிலேயே, இந்த விடயம் தொடர்பில் உரிய விசாரணைகளை மேற்கொள்ளுமாறு தெரிவித்தே மேற்படி முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.