21
கனடாவின் டொராண்டோ நகரில் உள்ள ஒரு பப்பில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஒரு பலர் பேர் காயமடைந்துள்ளதாகவும், மூன்று சந்தேக நபர்கள் இன்னும் தலைமறைவாக இருப்பதாகவும் அந்நாட்டு காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கிழக்கு டொராண்டோவில் உள்ள ஸ்கார்பரோ நகர மையத்திற்கு அருகில் வெள்ளிக்கிழமை உள்ளூர் நேரப்படி 22:39 மணிக்கு (சனிக்கிழமை GMT 03:39) துப்பாக்கிச் சூடு நடந்தது.
துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் 12 பேர் காயமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். காமடைந்தவர்கள் எவருக்கும் உயிர் ஆபத்து இல்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.
பாதிக்கப்பட்டவர்கள் 20 வயது முதல் 50 வயது வரை உள்ளவர்கள்.
துப்பாக்கிச் சூடு நடத்தியதாக மூன்று ஆண் சந்தேக நபர்கள் இருப்பதாகக் காவல்துறையினர் தெரிவித்தனர்.