Home யாழ்ப்பாணம் நாடுகடத்துவித்தது ஈழம் சிவசேனை!

நாடுகடத்துவித்தது ஈழம் சிவசேனை!

by ilankai

இந்தியாவில் இருந்து சுற்றுலா விசாவில் வருகை தந்த மதப்பிரச்சாரகர்கள் கைது செய்யப்பட்டு நாடுகடத்தப்படவுள்ளதாக ஈழம் சிவசேனை அறிவித்துள்ளது. 

அவர்கள் சிவ பூமி ஆன யாழ்ப்பாணத்தில் சைவர்களின் மரபுகளையும் மாண்புகளையும் சிதறடிக்க முயன்றனர். மேலைநாட்டுப் பணத்தில் இயங்கும் இக் கைக்கூலிகளை யாழ்ப்பாணத்துச் சிவ சேனையினர் ஓட ஓட விரட்டினர்.

04 ம் திகதியன்று சென்னை விமான நிலையத்திலிருந்து யாழ்ப்பாணம் விமான நிலையத்துக்கு வந்தனர். 

மாதகல் புத்த வழிபாட்டுத் தலத்துக்கு அருகில்   சுவிசேச சபை.  மதம் மாற்ற நிலையம். சுற்றுலா விசாவில் வந்து பொது வெளியில் மதமாற்றச் செயற்பாடுகளில் ஈடுபட்டனர். இலங்கைக் குடிவரவு குடியகல்வு அலுவலர் எச்சரிக்கை செய்து அனுப்பினார்கள். 

பின்னர் மாதகல் தேவாலயத்துக்கு முன்பாக பொதுக் காணியைத் துப்பரவாக்கினர். மதமாற்றக் கூட்டத்திற்குத் தயாராயினர். நூற்றுக்கணக்கான சிவ சேனைத் தொண்டர்கள் அதிர்ந்தனர்.இளவாலை க் காவல் நிலையத்தில் எழுத்தில் முறையிட்டனர். 

தாங்கள் மத போதனைகளில் ஈடுபட மாட்டோம் என இந்தியப் போதகர் உறுதி கூறினர். ஒப்புதல் கையொப்பமுமிட்டனர்.ஆனாலும் அவர்கள் நேற்றம் நேற்றுமுன்தினமும் திகதிகளில் மதமாற்றச் செயற்பாடுகளில் ஈடுபட்டனர்.சிவ சேனை முறையிட்டது.குடிவரவு குடிஅகல்வுத் திணைக்களத்தார் கொழும்பில் இருந்து வந்தனர்.நேற்று 06 ம் திகதி மாலை கைது செய்தனர்.

கட்டுநாயக்கா விமான நிலையம் ஊடாக நாடு கடத்த அழைத்துச் சென்றனர். 

பல்கலைக்கழக வேந்தர் பால் தினகரனையும் கூட்டாளிகளையும் நாடுகடத்தினோம்.

வவுனியா வந்த ஐரோப்பிய மத மாற்றிக்குழுவை நாடு நடத்தினோம்.

கல்முனை, சிலாபம், கிளிநொச்சி வந்த இந்திய மதமாற்றிகளை நாடுகடத்தினோம்.

அந்த வரிசையில் இப்போது மாதகல் வந்த இந்தியப் போதகர் இருவர்.

நாடுகடத்தனால் அடுத்த 10 ஆண்டுகளுக்கு இலங்கைக்குள் நுழைய முடியாதென மறவன்புலோ சச்சிதானந்தன் தெரிவித்துள்ளார்

Related Articles