இந்த வருடம் ஜனவரி முதல் மார்ச் 5ஆம் திகதி வரை 19 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன என பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார்.
மேலும் தெரிவிக்கையில்,
19 துப்பாக்கி சூடுகளிலும், 12 சம்பவங்கள் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல்களாலும், ஏனைய 7 சம்பவங்கள் தனிப்பட்ட தகராறுகள் காரணமாக நடந்துள்ளது.
துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் தொடர்பான விசாரணைகளைத் தொடர்ந்து, 68 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதோடு, துப்பாக்கிச் சூட்டுக்காக பயன்படுத்தப்பட்ட 6, T56 ரக துப்பாக்கிகளும் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
அத்துடன், இரண்டு கைத்துப்பாக்கிகள் மற்றும் ஏனைய வகையான 5 கைத்துப்பாக்கிகளும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளதாக புத்திக மனதுங்க தெரிவித்தார்.
அதேவேளை குறித்த குற்றங்களுக்குப் பயன்படுத்தப்பட்ட 8 மோட்டார் சைக்கிள்கள், இரண்டு கார்கள், ஒரு வேன் மற்றும் இரண்டு முச்சக்கர வண்டிகள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.