தென் கொரியாவில் இராணுவப் பயிற்சியின் போது பொதுமக்கள் வசிக்கும் பகுதி மீது ஒரு போர் விமானத்திலிருந்து எட்டு குண்டுகள் தற்செயலாக வீசப்பட்டதாக விமானப்படை அதிகாரிகள் தெரிவித்தனர்.
போச்சியோனின் பொதுமக்கள் பகுதியில் குண்டுகள் விழுந்ததாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தென் கொரியாவில் ஒரு பொதுமக்கள் வசிக்கும் போச்சியோன் பகுதியில நேரடி துப்பாக்கிச் சூடு இராணுவப் பயிற்சியின் போது அந்நாட்டின் வாப்படையின் விமானங்கள் 8 குண்டுகளை வீசியதில் குறைந்தது 15 பேர் காயமடைந்ததாக அந்நாட்டு விமானப்படை தெரிவித்துள்ளது.
வீசப்பட்ட குண்டுகள் இராணுவப் பயிற்சிகள் நடந்த பகுதியை விட்டு மக்கள் வசிக்கும் பகுதிக்குள் வீழ்ந்து வெடித்துள்ளன.
எதிர்பாராத விதமாக வெடித்த குண்டுகளுக்கு நாங்கள் ஆழ்ந்த வருத்தம் தெரிவிக்கிறோம். அத்துடன் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறோம் என்று தென்கொரியா கூறியது.
அவசர சேவைகள் குறைந்தது 15 பேர் காயமடைந்ததாகக் கூறியது. அதில் இருவர் படுகாயமடைந்தனர்.
இச்சம்பவத்தை விசாரிக்க விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில் விமானியின் பிழை மற்றும் தவறான ஒருங்கிணைப்புகள் காரணமாக தற்செயலான குண்டுவெடிப்பு நடந்ததாக தென் கொரிய இராணுவம் தெரிவித்துள்ளது.
தென் கொரியாவின் போச்சியோன் பகுதியில், சியோலில் இருந்து வடகிழக்கே சுமார் 40 கிலோமீட்டர் (25 மைல்) தொலைவில் உள்ள பகுதியில் உள்ளூர் நேரப்படி காலை 10:00 மணியளவில் குண்டுகள் விழுந்ததாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இது வட கொரியாவுடனான பெரிதும் இராணுவமயமாக்கப்பட்ட எல்லைக்கு அருகில் உள்ளது.