Home இந்தியா தேர்தலிற்கு முன் மோடி வருகிறார்?

தேர்தலிற்கு முன் மோடி வருகிறார்?

by ilankai

அதானி முதலீட்டு வெளியேற்றம் மற்றும் உள்ளுராட்சி சபை தேர்தல் பரபரப்புக்களின் மத்தியில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஏப்ரல் மாதம் இலங்கைக்கு பயணம் மேற்கொள்வார் என இந்திய ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. அஇந்திய பிரதமரின் விஜயம் உறுதியான போதும் திகதி முடிவாகவில்லை எனினும்  ஏப்ரல் 5 ஆம் திகதிக்குள் அவரது பயணம் நடக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய பிரதமரது பயணத்தின் போது இலங்கை – இந்திய பொருளாதார விடயங்கள் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் கவனம் செலுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே இந்திய பிரதமர் மோடி தனது பயணத்தின் போது இம்முறை யாழ்ப்பாணம் வருகை தரமாட்டாரெனவும் எனினும் இந்திய முதலீட்டில் மின் உற்பத்தி மையம் அமையவுள்ள திருகோணமலையின் சம்பூருக்கு அவர் செல்வார் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

Related Articles