இலங்கைத்தமிழ் அரசுக்கட்சி வடகிழக்கு எட்டு மாவட்டங்களை விட்டு வேறு மாவட்டங்களில் உள்ளூராட்சி சபை தேர்தலில் போட்டியிடுவதால் ஏற்படப்போகும் பாதிப்புகள் அல்லது பின்விளைவுகள்.:
இணைந்த வடகிழக்கில் சமஷ்டி அடிப்படையிலான தீர்வை கைவிட்டதாக காண்பிக்கப்படும்.
கடந்த 75, வருடங்களாக தந்தை செல்வா ஆரம்பித்த இலங்கை தமிழ் அரசுக்கட்சியின் கொள்கை ரீதியான அரசியல் செயல்பாடுகள் இதன்மூலமாக விலகிச்செல்கிறதா என்ற சந்தேகம் ஏற்படலாம். ஒருமித்த நாட்டுக்குள் ஏனைய அரசியல் கட்சிகளைப்போல் தேர்தல் அரசியலாக தத்தமது கட்சிகளை பயன்படுத்துவது போன்று தழிழரசு கட்சியும் செயல்படுகிறது என்பது உறுதிப்படுத்தப்படும்.
ஜெனிவாவில் சென்று வெளிவிகார அமைச்சர் விஜித ஹேரத் கடந்த மாதம் கூறிய “வடகிழக்கு மக்களும் தேசிய மக்கள் சக்திக்கு ஆணை வழங்கியுள்ளனர்” என்று கூறியகருத்து உள்ளூராட்சி சபை தேர்தல் முடிந்ததும் இலங்கை தமிழ் அரசு கட்சி வடகிழக்கு தாயக கோட்பாட்டை கைவிட்டு கொழும்பு தலைநகரில் போட்டியிட்டதன் மூலம் “ஏக்கிய ராச்சிய” ஒருமித்த நாட்டில் சமத்துவமாக வாழ விருப்புகிறார்கள் என்பதை கூற வாய்பாக அமையும்.
இதுவரை போராடிய நிறைவேறிய அரசியல் ரீதியிலான தீர்வு திட்டங்கள், தீர்மானங்கள் எல்லாம் மல்லினப்படுத்தப்படும்.
இந்திய அரசு, சர்வதேசம் போன்ற நாடுகளுகளுக்கு தமிழ்தேசிய கொள்கைரீதியிலான செயல்பாடுகள் இதன்மூலமாக பின்னடைவுகளை சந்திக்க வாய்பு ஏற்படும்.