Home யாழ்ப்பாணம் தமிழரசு கொழும்பிலும் களமிறங்கும்

தமிழரசு கொழும்பிலும் களமிறங்கும்

by ilankai

எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் கொழும்பில் களமிறங்குவதற்கு இலங்கைத் தமிழரசுக் கட்சி தயாராகி வருவதுடன் இதற்கமைய கொழும்பில் போட்டியிட விரும்பும் வேட்பாளர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளதாக  இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பதில் பொதுச் செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,

தற்போது நாட்டில் தோற்றம் பெற்றிருக்கும் அரசியல் கலாசாரத்துக்கு ஈடுகொ டுக்கும் விதமாகவும், கொழும்பு வாழ் தமிழ் மக்களால் நீண்டகால மாக முன்வைக்கப்பட்டுவரும் கோரிக்கைக்குச் செயல் வடிவம் கொடுக்கும் வகையிலும் கட்சியினால் இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

அதற்கமைய முதற்கட்டமாக எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பாளர்களைத் தெரிவுசெய்யும் பொருட்டு கட்சியின் செயற்பாட்டாளர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.

இந்தத் தேர்தலில் வேட்பாளராகப் போட்டியிட விரும்புபவர்கள் தமது முழுப்பெயர், முகவரி, தொலைபேசி இலக்கம், வட்டாரம், அரசியல் செயற்பாடுகளில் கொண்டிருக்கும் அனுபவம் உள்ளிட்ட விவரங்கள் அடங்கிய விண்ணப்பத்தை எதிர்வரும் 7 ஆம் திகதிக்கு முன்னர் கிடைக்கக்கூடிய வகையில் செயலாளர், இலங்கைத் தமிழரசுக்கட்சி, இலக்கம் 40, மாட்டின் வீதி, யாழ்ப்பாணம் எனும் முகவரியின் ஊடாக கட்சியின் தலைமைச் செயலகத்துக்கு அனுப்பிவைக்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.

Related Articles