Home இலங்கை 3 கோடி ரூபாய் மதிப்புள்ள மொபைல் போன்களுடன் விமான நிலையத்தில் ஒருவர் கைது!

3 கோடி ரூபாய் மதிப்புள்ள மொபைல் போன்களுடன் விமான நிலையத்தில் ஒருவர் கைது!

by ilankai

கட்டுநாயக்கவில் உள்ள பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) சுமார் 30 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள சட்டவிரோதமாக கடத்தப்பட்ட உயர் ரக ஸ்மார்ட் போன்கள் நாட்டிற்கு கடந்தி வந்த பயணி ஒருவரை சுங்க அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

சந்தேக நபர் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் உள்ள கிரீன் சேனல் வழியாக கையடக்கத் தொலைபேசிகளை நாட்டிற்குள் கடத்த முயன்றுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கொழும்பில் வசிக்கும் 28 வயதுடைய தொழிலதிபர் ஆவார்.

அதன்படி, துபாயில் இருந்து வந்த சந்தேக நபருக்குச் சொந்தமான மூன்று சூட்கேஸ்களுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த பல்வேறு மாடல்களில் மொத்தம் 111 மதிப்புமிக்க மொபைல் போன்களை சுங்க அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.

Related Articles