Home யாழ்ப்பாணம் யாழில். தந்தை செலுத்திய உழவு இயந்திரத்தினுள் சிக்கி மகன் உயிரிழப்பு

யாழில். தந்தை செலுத்திய உழவு இயந்திரத்தினுள் சிக்கி மகன் உயிரிழப்பு

by ilankai

யாழில். தந்தை செலுத்திய உழவு இயந்திரத்தினுள் சிக்கி மகன் உயிரிழப்பு

யாழ்ப்பாணத்தில் தந்தை ஓட்டிய உழவு இயந்திரத்தினுள் அகப்பட்டு , சிறுவன் உயிரிழந்துள்ளான் 

உடுவில் பகுதியை சேர்ந்த சுன்னாகம் சுன்னாகம் ஸ்கந்தவரோதயா கல்லூரியில் கல்வி கற்கும் நிகால்தாசன் ஆத்வீகன் (வயது 11) எனும் சிறுவனே உயிரிழந்துள்ளான். 

வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த உழவு இயந்திரத்தை தந்தை பின் நோக்கி செலுத்தும் போது , பின் புறமாக நின்ற சிறுவனின் மீது உழவு இயந்திரம் ஏறியதால் சிறுவன் உயிரிழந்துள்ளதாக பொலிசாரின் ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளது. 

சம்பவம் தொடர்பில் சுன்னாக பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Related Articles