18
கொழும்பிலிருந்து கண்டி நோக்கி நிர்வாண கோலத்தில் உந்துருளியில் பயணித்த நபரொருவரை இன்று திங்கட்கிழமை (3) காலை கடுகண்ணாவை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட நபர் அஹங்கம பகுதியைச் சேர்ந்த 23 வயதுடையவர் என காவல்துறையினர் தெரிவித்தனர்.
கொழும்பு – கண்டி வீதியில் நிர்வாணமாக மோட்டார் சைக்கிளில் சென்ற இந்த நபரை இடைமறித்துப் பிடிக்க கேகாலை, மாவனெல்ல முதலான பிரிவுகளைச் சேர்ந்த காவல்துறையினர் கடுமையாக முயற்சித்தும் அந்த நபரை பிடிக்க முடியாமற்போன நிலையில், கடுகண்ணாவை காவல்துறையினர் வீதித் தடைகளை ஏற்படுத்தி குறித்த நபரை பிடித்து, கைது செய்ததாக காவல்துறையினர் மேலும் கூறியுள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளில் கடுகண்ணாவை காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.