உலகம் முழுவதும் மனிதர்கள் பயப்படும் பறவைகள் அதிகம் இல்லை. ஆனால் காசோவரிப் பறவையைப் பார்த்துப் பயப்படுகிறார்கள் மனிதர்கள்.
இது உலகின் மிகவும் ஆபத்தான பறவை என்று அழைக்கப்படுகிறது. இவை ஆஸ்திரேலியா மற்றும் நியூ கினியாவின் வெப்பமண்டல மழைக்காடுகளில் வாழ்கின்றன. இந்தப் பறவை அதன் தெளிவான நீல முகம், தலைக்கவசம் போன்ற தலையில் உள்ள ஓடு மற்றும் கூர்மையான நகங்கள் காரணமாக அழகாகவும் ஆபத்தானதாகவும் இருக்கிறது. இது 310 கிலோ வரை எடையுள்ளதாகவும் மனிதனைப் போல உயரமாகவும் வளரக்கூடும்.
அந்தப் பறவை மீது ஒரு அம்சம் இருக்கிறது. அவை உயிருள்ள டைனோசர்களைப் போலவே இருக்கின்றன என்று பப்புவா நியூ கினியாவில் காடுகளில் காசோவரிகளைப் பற்றி ஐந்து ஆண்டுகள் ஆய்வு செய்த ஆண்ட்ரூ மேக் சி.என்.என் இடம் கூறினார்.
காசோவரிகள் கூச்ச சுபாவமுள்ளவை என்றும், பொதுவாகக் கண்டறிவது கடினம் என்றும் கூறப்படுகிறது. அவை மிகவும் வன்முறையானவை அல்ல. மனிதர்களை அரிதாகவே தாக்குகின்றன. ஆனால் புண்படுத்தப்பட்டால் அல்லது கோபப்பட்டால், அவை அதிக அளவு தீங்கு விளைவிக்கும் தன்மை கொண்டது.
இந்தப் பெரிய பறவைகளால் பறக்க முடியாவிட்டாலும், அவற்றின் நம்பமுடியாத வலிமையான கால்கள் காரணமாக அவை விரைவாக நகரும். அவை நிலத்திலும் நீரிலும் வேகமாக நகரும். மேலும் அவை நன்றாக நீந்தக்கூடியதாக இருக்கும். காசோவாரிகள் மணிக்கு 31 மைல் வேகத்தில் ஓடுவதைக் காணலாம்.
காசோவரிகள் காற்றில் ஏழு அடி உயரம் வரை எழும்பி எதிரிக்கு சக்திவாய்ந்த உதைகளை வழங்கக் கூடியது. மனிதர்கள் உட்பட அச்சுறுத்தலாக இருக்கும் எந்த விலங்கையும் வெட்டவும் துளைக்கவும் கூர்மையான நகங்களைப் பயன்படுத்துகின்றன.
இந்த உயிரினங்கள் பெரிதாகவும் அச்சுறுத்தலாகவும் தோன்றினாலும், மனிதர்களை விட மனிதர்களால் இறக்கும் காசோவாரிகள் அதிகமாக இறக்கின்றன என்று கடலோர மற்றும் காசோவரி பாதுகாப்பு சமூகத்தின் நிறுவனர் பீட்டர் ரோல்ஸ் கூறினார்.
காட்டில் ஒரு காசோவரியை நீங்கள் சந்தித்தால், முதலில் உங்கள் கைகளை உங்கள் முதுகுக்குப் பின்னால் வையுங்கள். முடிந்தவரை சலிப்டைந்தவர்ள் போல் இருங்கள். அப்படி இருந்தால் காசோவரியின் கவனத்தை நீங்கள் ஈர்க்க மாட்டீர்கள். ஒரு மரத்தின் பின்னால் செல்லுங்கள். சூழலுடன் கலந்துவிடுங்கள். கத்தாதீர்கள், கைகளை அசைக்காதீர்கள் என்று பீட்டர் ரோல்ஸ் கூறினார்.
சில பழங்குடி கலாச்சாரங்கள் காசோவரிகளை கலாச்சார ரீதியாக முக்கியமானதாகக் கருதுகின்றன. மேலும் அவை அவ்வப்போது பாரம்பரிய நடனங்கள், சடங்குகள் மற்றும் இரவு நேரக் கதைகளில் இடம்பெறுகின்றன. இந்த பழங்குடி சமூகங்களில் சில தற்போது காசோவரி பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளன.