உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களுக்கான திகதி இவ்வார இறுதிக்குள் அறிவிக்கப்படும் எனத் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
அத்துடன் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை மிக விரைவில் நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல்கள் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க அண்மையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் குறிப்பிட்டார்.
மேலும், 2023 ஆம் ஆண்டு உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களுக்காக செலுத்தப்பட்ட கட்டுப்பணத்தை விரைவில் திருப்பிச் செலுத்த நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட துணை மற்றும் உதவித் தேர்தல் ஆணையாளர்களுக்கு தேர்தல்கள் ஆணைக்குழு அறிவுறுத்தியுள்ளது.
இதேவேளை உள்ளூராட்சி மன்றத் தேர்தல் எதிர்வரும் ஏப்ரல் 20 முதல் 30 ஆம் திகதிக்கு இடைப்பட்ட காலத்தில் நடைபெறும் என கொழும்பு ஊடகமொன்று அண்மையில் தெரிவித்திருந்தது.
இந்த நிலையில் உள்ளூராட்சித் தேர்தலை ஏப்ரல் மாத இறுதி வரை ஒத்திவைக்குமாறு, எதிர்க்கட்சிகள் தேசிய தேர்தல் ஆணையகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது