Home கிளிநொச்சி வேரவிலும் கையை விட்டுப்போனது!

வேரவிலும் கையை விட்டுப்போனது!

by ilankai

மன்னார்-கௌதாரிமுனையிலிருந்தான அதானியின் காற்றாலை திட்டம் கைவிடப்பட்டுள்ள நிலையில் பூநகரியின் வேரவில் பகுதியில் திட்டமிடப்பட்ட நூறு காற்றாலை திட்டமும் மக்கள் எதிர்ப்பினால் முடக்க நிலையை எதிர்கொண்டுள்ளது.

இந்நிலையில் வலுசக்தி அமைச்சினால் முன்வைக்கப்பட்டுள்ள ஐந்தாண்டு மீள்புதுப்பிக்கத்தக்க வலுசக்தி அபிவிருத்தித் திட்டமான “பசுமை வலுசக்தித் துறையை விரைவுபடுத்தும் திட்டம் 2025-2030” அங்குரார்ப்பண நிகழ்வு கொழும்பில் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தலைமையில் நடைபெற்றுள்ளது.

மீள்புதுப்பிக்கத்தக்க வலுசக்தியை கண்டறிந்து ஊக்குவிப்பதன் மூலம் அடுத்த 5 ஆண்டுகளில் இலங்கையின் மின்சாரத் தேவையைக் குறைப்பதும் மின்சாரத்திற்கான அடிப்படைச் செலவைக் குறைப்பதும்; முதன்மை நோக்கமாகும்.

அடுத்த ஐந்து வருடங்களுக்குள் மீள்புதுப்பிக்கத்தக்க வலுசக்தி உற்பத்தியை அதிகரித்து அனைத்து இலங்கையர்களுக்கும் மலிவு விலையில் மின்சாரத்தை வழங்குவதே எமது நோக்கமாகும்.

எமது வலுசக்தி தொடர்பான சட்டங்கள் மூன்று முக்கிய வழிகளில் திருத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. முதலாவது, சூரிய சக்தி, காற்றாலை சக்தி மற்றும் நீர் போன்ற மீள்புதுப்பிக்கத்தக்க சக்திவளத்தைப் பயன்படுத்தி, மின் உற்பத்தி செய்யப்படவுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு தொடர்புகளைப் பயன்படுத்தி இந்தத் திட்டத்தை வெற்றியடையச்செய்ய வேண்டுமென பிரதமர் ஹரிணி தெரிவித்துள்ளார்.. 

Related Articles