மெக்சிகன் பொருட்களுக்கு 25% வரிகளை விதிக்கும் டிரம்பின் நடவடிக்கையைத் தடுக்கும் ஒரு நடவடிக்கையாக முக்கிய போதைப்பொருள் கும்பல் நபர்களை மெக்சிகோ அமெரிக்காவுக்கு நாடுகடத்தியது. இந்த நாடுகடத்தல் மெக்சிகோவின் பல ஆண்டுகளில் இதுவே மிகப்பெரிய நாடுகடத்தலாகும்.
மெக்சிகன் அதிகாரிகள் வியாழக்கிழமை 29 கார்டெல் நபர்களை அமெரிக்காவிற்கு ஒப்படைப்பதாக அறிவித்தனர்.
மெக்சிகன் அட்டர்னி ஜெனரல் அலுவலகம் மற்றும் பாதுகாப்பு அமைச்சகத்தின் கூட்டு அறிக்கையின்படி, அமெரிக்க நீதித்துறை இந்த ஒப்படைப்பைக் கோரியிருந்தது.
இந்த ஒப்படைப்பு “வரலாற்று சிறப்பு வாய்ந்தது” என்று அமெரிக்க போதைப்பொருள் அமலாக்க நிர்வாகத்தின் (DEA) முன்னாள் சர்வதேச நடவடிக்கைகளின் தலைவரான மைக் விஜில் கூறினார்.
எதிர்வரும் மார்ச் 4 முதல் அமலுக்கு வரும் அனைத்து மெக்சிகன் இறக்குமதிகளுக்கும் 25% வரிகளை விதிக்கவுள்ளது.