27
கணேமுல்ல சஞ்சீவவின் கொலை தொடர்பாக நீதிமன்றத்தில் இரகசிய அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
விசாரணையை மேற்கொண்டு வரும் கொழும்பு குற்றப்பிரிவு, கொழும்பு தலைமை நீதவான் தனுஜா லக்மாலியின் உத்தியோகபூர்வ அறையில் தொடர்புடைய அறிக்கையை சமர்ப்பித்துள்ளது.
குறித்த அறிக்கைக்கு அமைவாக, நீதிமன்றம் பொலிஸாருக்கு பல உத்தரவுகளையும் பிறப்பித்துள்ளது.
அதன்படி, பூஸா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகள் குழுவிடமிருந்து வாக்குமூலங்கள் பெறப்பட உள்ளன.
கடந்த 19 ஆம் திகதி காலை, கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தின் 5 ஆம் இலக்க நீதவான் நீதிமன்றத்திற்குள் வைத்து பாதாள உலகக்குழு தலைவராக கணேமுல்ல சஞ்சீவ சுட்டுக் கொல்லப்பட்டார்.
இந்த சம்பவம் குறித்து கொழும்பு குற்றப்பிரிவு தற்போது விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.