இந்தோ-திபெத் எல்லை அருகே உள்ள உத்தரகண்டில் திடீரென பனிச்சரிவு ஏற்பட்டுள்ளது இதில் 57 சாலைத் தொழிலாளர்கள் பனிச்சரிவில் சிக்கியுள்ளனர்.
பனிச்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் பேரிடர் மீட்புக் குழுவினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இதில் 10 பேர் மீட்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
எஞ்சியவர்களை மீட்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
உத்தரகண்ட் மாநிலம் மனாவில் உள்ள எல்லை சாலைகள் அமைப்பின் (BRO) முகாமில் பனிச்சரிவு ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இந்த முகாம் திபெத்துடன் எல்லையைப் பகிர்ந்து கொள்கிறது. உயிரிழப்புகள் ஏற்பட்டதா என்பது குறித்து இதுவரை எந்த தகவலும் இல்லை.
இந்தோ-திபெத்திய எல்லை காவல்துறை, இராணுவத்தினரும் மீட்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக உத்தரகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி எக்ஸ் தளத்தில் உறுதிப்படுத்தினார்.
ஆம்புலன்ஸ்கள் மற்றும் அவசரகால குழுக்கள் அனுப்பப்பட்டுள்ளன, ஆனால் ஆபத்தான நிலைமைகள் மீட்புப் பணியாளர்களுக்கு தொடர்ந்து சவால்களை ஏற்படுத்துகின்றன.
மீட்கப்பட்டவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர், ஆனால் அவர்களின் காயங்களின் அளவு இதுவரைத் தெளிவாகத் தெரியவில்லை.