எல்லை தாண்டும் இந்திய மீனவர்களை கட்டுப்படுத்துமாறு கோரி மாபெரும் கவனயீர்ப்பு போராட்டமொன்று தற்போதைய மீன்பிடி அமைச்சர் சந்திரசேகரனின் தூண்டுதலில் யாழ்ப்பாணத்தில் இன்று வியாழக்கிழமை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணத்திலுள்ள மீனவ அமைப்புக்கள் முன்னாள் மீன்பிடி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் தற்போதைய மீன்பிடி அமைச்சர் சந்திரசேகரன் அணிகள் என பிளவுண்டுள்ளன.
இந்நிலையில் இன்றைய தினம் யாழ்ப்பாணம் தீவக மீனவ அமைப்புகள் இணைந்து யாழ்ப்பாணத்தில் கவனயீர்ப்பு போராட்டத்தை நடத்தியுள்ளன.பண்ணை சுற்றுவட்டத்தில் ஆரம்பமாகிய போராட்டமானது தொடர்ந்து அருகாமையில் அமைந்துள்ள யாழ். மாவட்ட கடற்றொழில் நீரியல் வள திணைக்களத்தின் உதவி ஆணையாளரிடம் மகஜர் ஒன்றை கையளித்து தொடர்ச்சியாக பயணித்திருந்தது.
அத்துடன் யாழ். இந்திய துணை உயர் ஸ்தானிகராலயத்தை அடைந்து டைந்த நிலையில் இந்திய பிரதி உயர்ஸ்தானிகரிடம் மகஜர் கையளிப்புடன் முடிவுற்றிருந்தது.
அதேவேளை போராட்டக்காரர்கள் வருகை தந்த பாதைக்கு இலங்கை காவல்துறையினர் கடுமையான பாதுகாப்பு வழங்கியதோடு பொதுமக்களை பாதையில் பயணிக்க அனுமதி மறுக்கப்பட்டது. அத்துடன்; கண்ணீர் புகை குண்டுகள் சகிதம் இந்திய யர்ஸ்தானிகாரலயத்துக்கு முன்பாக கலகமடக்கும் காவல்துறையினர் கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டிருந்தனர்.