by ilankai

யாழ்ப்பாணம், கோப்பாய் பகுதியில் இறுதி ஊர்வலத்தில் சென்றவர்கள் மீது மோதி தள்ளி விட்டு தப்பிச் சென்ற வாகனத்தை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

யாழ்ப்பாணம் பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய கைதடி பகுதியில் உள்ள வீடொன்றில் மறைத்து வைத்திருந்த நிலையில் வாகனம் இன்றைய தினம் புதன்கிழமை பொலிஸாரால் கைப்பற்றப்பட்டது.

கோப்பாய் பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை உயிரிழந்த ஒருவரின் பூதவுடலுக்கு இறுதி கிரியைகள்  நடைபெற்று தகன கிரியைக்காக கோப்பாய் – கைதடி வீதியில் உள்ள இந்து மயானத்திற்கு ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டது. 

ஊர்வலமாக சென்றவர்கள் மீது வீதியால் மிக வேகமாக வந்த வாகனம் மோதி தள்ளி விட்டு , அவ்விடத்தில் இருந்து தப்பி சென்றது.

விபத்தில் காயமடைந்தவர்கள் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன்  ஏனைய ஐந்து பேர் சிகிச்சை பெற்றனர்.

சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ள நிலையில் வாகனம் கைப்பற்றப்பட்டதுடன் வாகனத்தின் சாரதி மற்றும் உரிமையாளரை கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளனர்

Related Articles