தாய்லாந்தின் பாங்காக்கில் இருந்து வந்த 1.2 கிலோ குஷ் கஞ்சாவுடன் இந்தியப் பெண் ஒருவரை பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் உள்ள இலங்கை சுங்கத்தின் போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவின் அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
சந்தேக நபர் இன்று புதன்கிழ (26) அதிகாலை 12.00 மணியளவில் கத்தே பசிபிக் ஏர்லைன்ஸ் இயக்கப்படும் CX 611 விமானத்தில் வந்துள்ளார்.
38 வயதான பெண் பயணி ஹாங்காங் வழியாக இலங்கைக்கு வந்ததாக இலங்கை சுங்கத்துறைத் தெரிவித்துள்ளது.
சோதனை செய்யப்பட்ட அவரது பொருட்களில் உணவுப் பொதிகளுக்குள் போதைப்பொருள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது. இந்த குஷ் கஞ்சா இருப்பின் மதிப்பு சுமார் 12 மில்லியன் இலங்கை ரூபாய் என சுங்கத்துறை மதிப்பிட்டுள்ளது.
சந்தேக நபரும், கண்டுபிடிக்கப்பட்ட போதைப்பொருட்களும் மேலதிக விசாரணைகளுக்காக காவல்துறைப் போதைப்பொருள் தடுப்புப் பணியகத்திடம் (PNB) ஒப்படைக்கப்பட்டுள்ளன எனத் இலங்கை சுங்கத் துறையினர் தெரிவித்தனர்.