Home இலங்கை 12 மில்லியன் பெறுமதியான போதைப்பொருளுடன் இந்திய பெண் கட்டுநாயக்காவில் கைது 

12 மில்லியன் பெறுமதியான போதைப்பொருளுடன் இந்திய பெண் கட்டுநாயக்காவில் கைது 

by ilankai

சுமார் ரூ.12 மில்லியன் மதிப்புள்ள 1 கிலோ 200 கிராம் குஷ் போதைப்பொருளுடன் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவின் அதிகாரிகளால் இன்றைய தினம் புதன்கிழமை கைது செய்யப்பட்டார். 

குறித்த பெண், தாய்லாந்தின் பெங்கொக்கிலிருந்து ஹொங்கொங் வழியாக இலங்கைக்கு பிரவேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர் 38 வயதுடைய இந்தியப் பெண் என தெரியவந்துள்ளது. 

இந்த குஷ் போதைப்பொருளை சந்தேகநபர், தனது பயணப்பையில் உணவு பொதியொன்றில் மறைத்து வைத்து கொண்டு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

சந்தேகநபரும் மீட்கப்பட்ட போதைப்பொருளும் மேலதிக விசாரணைகளுக்காக பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

Related Articles