Home தமிழ்நாடு மீண்டும் கப்பல் காணாமல் போய்விட்டது!

மீண்டும் கப்பல் காணாமல் போய்விட்டது!

by ilankai

பெரும் பிரச்சாரங்களுடன் மீண்டும் ஆரம்பிக்கப்பட்ட நாகப்பட்டினம்– காங்கேசன்துறை கப்பல் சேவை தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டுள்ளது.

கப்பல் சேவை, கடந்த 22 ஆம் திகதி ஆரம்பித்த நிலையில் மீண்டும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் பெய்து வரும் கடும் மழை மற்றும் மோசமான வானிலையைக் கருத்திற் கொண்டு சேவை நிறுத்தப்பட்டுள்ளதாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

மோசமான வானிலை காரணமாக கப்பலை இயக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாகவும், அதனால் இன்று புதன்கிழமை முதல் நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை வரை கப்பல் போக்குவரத்து தற்காலிகமாக இடை நிறுத்தப்படுவதாக கப்பல் நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும், மார்ச் முதலாம் திகதி நாகை – இலங்கை இடையேயான கப்பல் சேவை வழக்கம் போல் ஆரம்பிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெரும் பிரச்சாரங்களுடன் ஆரம்பிக்கப்பட்ட கப்பல் சேவை தொடர்ச்சியாக தடைப்பட்டுவருகின்றமை விமான நிறுவனங்களது தலையீட்டினாலேயே என குற்றஞ்சாட்டப்படுகின்றமை தெரிந்ததே.

Related Articles