Home யாழ்ப்பாணம் சுமா தனியே தன்னந்தனியே:பின்னர் பேசுவராம்!

சுமா தனியே தன்னந்தனியே:பின்னர் பேசுவராம்!

by ilankai

நடைபெறவிருக்கும் உள்ளூராட்சி சபை தேர்தலில் தமிழரசு கட்சி தனித்துப் போட்டியிடும் என தமிழரசுக் கட்சியின் பதில் செயலாளர் சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

பருத்தித்துறை நீதிமன்றிற்கு தொழில் நிமித்தம் வருகை தந்த அவர் கருத்து வெளியிடுகையில் உள்ளூராட்சிசபைத் தேர்தலில், நாம் ஏற்கனவே எடுத்துக்கொண்ட தீர்மானத்திற்கமைவாக தனித்துப் போட்டியிடுவோம். சபைகளில் ஆட்சி அமைக்கும்போது, கூட்டாக ஆட்சி அமைக்க முடியும். ஏற்கனவே எமது கட்சித் தலைவர் தமிழ்த் தேசிய கட்சிகளுடன் பேச்சுக்களில் ஈடுபட்டுள்ளதாகவும்  எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

இதனிடையே எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் சங்கு சின்னத்தில் போட்டியிடவுள்ள தமிழ் கட்சிகளின் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.

கட்சிகளின் முதலாவது சந்திப்பு கடந்த 23 ஆம் திகதி யாழ்ப்பாணம் – இணுவில் பகுதியில் இடம்பெற்றிருந்த நிலையில் இன்று இரண்டாவது சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

இன்றை சந்திப்பில் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, தமிழீழ விடுதலை இயக்கம், ஜனநாயக போராளிகள் கட்சி, தமிழ்த் தேசிய கட்சி, தமிழ் மக்கள் கூட்டணி, ஜனநாயக தமிழரசு கட்சி, சமத்துவ கட்சி ஆகிய 8 கட்சிகள் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Articles