33
சுவிஸ் இராணுவத் தலைவர் மற்றும் உளவுத்துறை தலைவர் பதவி விலகினர்!
பாதுகாப்புத் துறையில் நெருக்கடி உச்சத்தை எட்டியுள்ளது நிலையில் சுவிஸில் இராணுவத் தலைவர் தாமஸ் சுஸ்லி மற்றும் மத்திய புலனாய்வு சேவை (FIS) தலைவர் கிறிஸ்டியன் டஸ்ஸி இருவரும் தங்கள் பதவிகளிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளனர்.
ஆனால் இராணுவத் தளபதி 2025 இறுதி வரை பதவியில் நீடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உளவுத்துறைத் தலைவர் கிறிஸ்டியன் டஸ்ஸியும் மார்ச் 2026 இறுதி வரை பதவியில் நீடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கூட்டாட்சி கவுன்சில் கூட்டத்திற்குப் பிறகு புதன்கிழமைதான் இது பகிரங்கப்படுத்தப்படவிருந்தது.