Home இலங்கை கணேமுல்ல சஞ்சீவ கொலை – செவ்வந்தியின் தாயும் , தம்பியும் கைது 

கணேமுல்ல சஞ்சீவ கொலை – செவ்வந்தியின் தாயும் , தம்பியும் கைது 

by ilankai

கணேமுல்ல சஞ்சீவ கொலை தொடர்பாக தாயும், மகனும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த 19 ஆம் திகதி, கணேமுல்ல சஞ்சீவ புதுக்கடை இலக்கம் 05 நீதிமன்றத்திற்குள் சுட்டுக் கொல்லப்பட்டார்.

சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து வரும் பொலிஸார், கொலைக்கு உடந்தையாக செயல்பட்ட குற்றச்சாட்டில் குறித்த இருவரையும் நேற்றைய தினம் திங்கட்கிழமை கைது செய்துள்ளனர்.

நீர்கொழும்பு, கட்டுவெல்லேகம பகுதியைச் சேர்ந்த பிங்புர தேவகே சமிது திவங்க வீரசிங்க என்ற 23 வயது இளைஞனும், அவரது தயாரான தேவகே சமந்தி என்ற 48 வயது பெண்ணும் கொலை தொடர்பான தகவல்களை மறைத்து, குற்றத்திற்கு உதவிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் இருவரும் கொலையின் பிரதான சந்தேக நபரான இஷாரா செவ்வந்தியின் தாயார் மற்றும் தம்பி என்பது தெரியவந்துள்ளது.

அதன்படி, இந்தக் குற்றச் செயல் தொடர்பாக இதுவரை 10 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்

கொழும்பு குற்றப்பிரிவு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.

Related Articles