யாழ்ப்பாணத்தில் குடும்பத்தகராறு காரணமாக வெளிநாட்டில் இருந்து வந்த மகன் , வன்முறை கும்பலுடன் இணைந்து மேற்கொண்ட தாக்குதலில் காயமடைந்த தந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
வடமராட்சி கிழக்கு , வத்திராயன் பகுதியில் வசிக்கும் , தந்தை , மகன் , மகனின் மனைவி மற்றும் மகனின் மகன் ஆகியோர் மீது கடந்த 19ஆம் திகதி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
தாக்குதலில் காயமடைந்த நால்வரும் மருதங்கேணி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் , மேலதிக சிகிச்சைக்காக இருவர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டனர்.
அவர்களின் ஒருவர் அங்கிருந்து யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்துள்ளார்
வவுனியாவில் இருந்து வன்முறை கும்பல் ஒன்றுடன் வாகனத்தில் வந்த நபரே தனது தந்தை, சகோதரன், சகோதரனின் மனைவி மற்றும் சகோதரனின் மகன் மீது தாக்குதல் நடாத்தியுள்ளார் எனவும் குறித்த நபர் வெளிநாட்டில் இருந்து வந்து வவுனியாவில் தங்கியுள்ளனர்.
தாக்குதலாளிகளில் வெளிநாட்டில் இருந்து வந்திருந்த நபரும் , அவர் அழைத்து வந்த வன்முறை கும்பலை சேர்ந்த இருவரும் மருதங்கேணி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் ,ஏனைய இருவரும் தலைமறைவாகியுள்ளனர்.