Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
பிரீட்ரிக் மெர்ஸின் CDU/CSU கூட்டணி தேசியத் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளது, இப்போது கூட்டணிக்கு பெரும்பாண்மை இல்லாததால் மேலும் கூட்டணி அமைப்பதற்குப் பேச்சுவார்த்தையை நடத்தவுள்ளது.
தீவிர வலதுசாரி கட்சியான (AfD) ஒத்துழைக்கக் கூடாது என்ற தனது நிலைப்பாட்டை மெர்ஸ் மீண்டும் வலியுறுத்தினார். அந்தக் கட்சி 20.8% வாக்குகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது.
பதவி விலகும் அதிபர் ஓலாஃப் ஸ்கோல்ஸ், இந்தத் தேர்தல் தனது மைய இடது சமூக ஜனநாயகக் கட்சி(SPD) 16.4% வாக்குகளுடன் மூன்றாவது இடத்தில் உள்ளது.
பசுமைக்கட்சி 11.6% வாக்குகளுடன் நான்காவது இடத்தில் உள்ளது.
CDU/CSU கட்சி நாடாளுமன்றில் 208 ஆசனங்களைப் பெற்றது.
தீவிர வலதுசாரிக்கட்சியான AfD கட்சி நாடாளுமன்றில் 152 ஆசனங்களைப் பெற்றது.
SPD கட்சி நாடாளுமன்றில் 120 ஆசனங்களைப் பெற்றது.
பசுமைக்கட்சி நாடாளுமன்றில் 85 ஆசனங்களைப் பெற்றது.
இடதுசாரிக் கட்சி 64 ஆசனங்களைப் பெற்றது.
ஏனையவை 1 ஆசனத்தைப் பெற்றது.
நாடாளுமன்றில் பெரும்பாண்மையை நிறுவவதற்கு 316 ஆசனங்களைக் காட்ட வேண்டிய நிலையில் பிரீட்ரிக் மெர்ஸின் CDU/CSU கூட்டணி ஏனைய இரு கட்சிகளுடன் கூட்டணி அமைக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.