Home கொழும்பு ராஜபக்சக்களது கொலையாளிகள் அம்பலம்:கொலை அச்சம்?

ராஜபக்சக்களது கொலையாளிகள் அம்பலம்:கொலை அச்சம்?

by ilankai

இலங்கையின் சிங்கள சமூக வலை வெளியீட்டாளர் சமுதித்த சமரவிக்ரமவுக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக பதில் பொலிஸ் மா அதிபர்  தெரிவித்துள்ளார்.

ராஜபக்சக்களது  பணிப்பில்  கடந்த காலங்களில் தமிழ் இளைஞர் யுவதிகள் மற்றும் சிங்கள செயற்பாட்டாளர்களை கடத்தி கொலை செய்த பாதாள உலக கும்பலை அவர் அம்பலப்படுத்தியிருந்தார்.

அவரின் உயிருக்கு அதிகரித்த அச்சுறுத்தல்கள் மற்றும் அவரது நான்கு நேர்காணல் செய்பவர்களின் மரணத்தைத் தொடர்ந்து, குறித்த பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

அமைச்சர்களுக்கான பாதுகாப்பு பிரிவின் நான்கு பொலிஸ் அதிகாரிகள் தனக்கு பாதுகாப்பு வழங்க நியமிக்கப்பட்டுள்ளதாக சமுதித்த சமரவிக்ரம குறிப்பிட்டுள்ளார்.

சமுதித்த சமரவிக்ரமவினால் நேர்காணல் செய்யப்பட்ட நான்கு பேர் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளனர்.

அண்மையில் மித்தெனிய பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களை அடுத்து சமுதித்த சமரவிக்ரம  தனக்கு பாதுகாப்பு வழங்குமாறு பொலிஸ் அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்திருந்தார்.

Related Articles