Home இலங்கை பேருந்தில் பயண பையில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட தோட்டக்கள் மீட்பு

பேருந்தில் பயண பையில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட தோட்டக்கள் மீட்பு

by ilankai

பேருந்தின் பயணப் பொதிகள் வைக்கும் மேற்பகுதியில் வைக்கப்பட்டிருந்த பயணப்பை ஒன்றிலிருந்து 123 தோட்டக்கள் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன. 

குறித்த பயணப்பையில் சிறிய இரும்பு பெட்டியொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், இந்த தோட்டக்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. 

கொழும்பிலிருந்து பதுளை நோக்கி பயணித்த பேருந்து ஒன்று நேற்றைய தினம் சனிக்கிழமை பண்டாரவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பண்டாரவளை பேருந்து நிலையத்திற்கு அருகில் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. 

பண்டாரவளை பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த சோதனை முன்னெடுக்கப்பட்டது. 

இதன்போது 123 செயற்படக்கூடிய தோட்டக்கள் கண்டுபிடிக்கப்பட்டது. 

இந்த தோட்டக்களில் 113 பிஸ்டல் தோட்டாக்கள், 9 T56 தோட்டாக்கள் மற்றும் T56 LMG தோட்டா ஒன்றும் காணப்பட்டுள்ளன. 

சந்தேக நபரைக் கைது செய்வதற்காக பண்டாரவளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Articles