32
சூரிச்சில் உள்ள லாகர்ஸ்ட்ராஸில் உள்ள வணிக வளாகத்தில் உள்ள கடையில் 28 வயது நபர்41 வயதுடைய ஒரு வாடிக்கையாளரை கத்தியால் குத்தினார். வாடிக்கையாளர் பலத்த காயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
சந்தேகத்திற்குரிய குற்றவாளி சம்பவ இடத்திலேயே கைது செய்யப்பட்டு, மேலதிக விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். தாக்குதலாளி ஆஸ்ரேலியா நாட்டைச் சேர்ந்தவர் என்று காவல்றையினர் கூறினர்.
இச்சம்பவம் நேற்று சனிக்கிழமை மாலை 4 மணியளவில் நடந்தது.
சம்பவ இடத்தில் எட்டு காவல்துறை வாகனங்களும், குற்றப் புலனாய்வுத் துறை, அவசர மருத்துவ வாகனம் மற்றும் ஒரு நோயாளர் காவுவண்டி ஆகியவை சம்பவ இடத்தில் இருந்தன.