இறந்த அல்லது உயிருள்ள நுழம்புகளை தருவோருக்கு ஒரு பரிசுத்தொகையை பிலிஸ்பைன் நாட்டின் நகர் ஒன்று அறிவித்துள்ளது.
ஆபத்தான டெங்கு காய்ச்சல் பரவுவதைத் தடுக்க வகையில் சம்பவத்தை பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவின் புறநகர்ப் பகுதியான அடிஷன் ஹில்ஸ் நகராட்சி மன்றம் இந்த அறிவிப்பை முகநூலில் வெளியிட்டது.
சமர்ப்பிக்கப்படும் ஒவ்வொரு ஐந்து நுழம்புக்கும் ஒரு பிலிப்பைன்ஸ் பெசோ (0.016 யூரோக்கள்) வழங்கப்படுகிறது. அந்த நகரின் குடியிருப்பாளர் ஒருவர் 45 நுழம்புகளைக் கொண்டுவந்து பணத்தைப் பெற்றுச் சென்றுள்ளார் என்பதை “டெய்லி ட்ரிப்யூன்” செய்தித்தாள் தனது எக்ஸ் தளத்தில் காணொளியை வெளியிட்டது.
இந்த சிறிய நகரில் சுமார் 100,000 மக்கள் வசிக்கிறார்கள். இங்கு தற்போது டெங்கு காய்சல் பரவுவது அதிகரித்து வருகிறது. இதனால் இந்த ஆண்டு முதல் 44 வழக்குகள் மருத்துவமனையில் பதியப்பட்டுள்ளன. இதில் இருவர் உயிரிழந்தனர்.
பிலிப்பைன்ஸ் நாட்டில் பிப்ரவரி 1 ஆம் திகதிக்குள் 28,000 க்கும் மேற்பட்ட வழக்குகள் மற்றும் 21 இறப்புகள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
குடிமக்கள் நுழம்புகளைச் சேகரிப்பதில் மகிழ்ச்சி அடைகிறார்கள் என்று நகர நிர்வாகத்தின் ஊழியரான கார்மெலிடா கோன்சலஸ் யேர்மன் பத்திரிகை நிறுவனத்திடம் தெரிவித்தார்.
ஆனால் மிக முக்கியமாக, நோயை எதிர்த்துப் போராட தங்கள் சுற்றுப்புறங்களை சுத்தமாக வைத்திருக்க வேண்டியதன் அவசியம் குறித்த விழிப்புணர்வை இது ஏற்படுத்துகிறது என்று அவர் கூறினார்.
இதேநேரம் இந்த நடவடிக்கை எதிர் விளைவுகளை ஏற்படுத்தலாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நுழம்பை அழிப்பதற்குப் பதிலாக அதை செயற்கை முறையில் இனம்பெருக்கம் செய்து அதிக இலாபம் அடைய வழியை உருவாக்கலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.