இரட்டை நிமோனியாவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போப் பிரான்சிஸின் உடல்நிலை சற்று முன்னேற்றம் அடைந்து வருகிறது. அவருக்கு காய்ச்சல் இல்லை என்றும் மேலும் அவரது இரத்த பகுப்பாய்வுகள் சீராக உள்ளன. அவரது இதயத்துடிப்புகள் நிலையாக உள்ளன என்று என்று செய்தித் தொடர்பாளர் மேட்டியோ புருனி தெரிவித்தார்.
போப் பிரான்சிஸின் ஒட்டுமொத்த உடல்நிலையில் சற்று முன்னேற்றம் ஏற்பட்டு வருவதாகவும், அவரது இதயம் நன்றாக வேலை செய்வதாகவும் வத்திக்கான் வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.
பிப்ரவரி 14 ஆம் திகதி ரோமின் ஜெமெல்லி பாலிகிளினிக் மருத்துவமனையில் போப் அனுமதிக்கப்பட்டார். அப்போது ஆஸ்துமா மூச்சுக்குழாய் அழற்சியின் மேல் இரு நுரையீரல்களிலும் நிமோனியா இருப்பது கண்டறியப்பட்டது .
நேற்று வியாழக்கிழமை பிரான்சிஸ் படுக்கையில் இருந்து எழுந்து ஒரு நாற்காலியில் காலை உணவை சாப்பிட்டுவிட்டு, பின்னர் தனது மருத்துவமனை அறையில் இருந்து தனது உதவியாளர்களுடன் வேலை செய்ததாக புருனி மேலும் கூறினார்