Home முல்லைத்தீவு உள்ளுரில் 17 பேர் கைது?

உள்ளுரில் 17 பேர் கைது?

by ilankai

சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 17 மீனவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.பெப்ரவரி 13 முதல் 19 வரை கொக்கடி நந்திக்கடல்,முல்லைத்தீவு, ஆனவாசல்,சின்னபாடு மற்றும் கட்டைக்காடு ஆகிய கடற்பகுதிகளிலும் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கைகளின் போது உள்ளுர் மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதனிடையே இந்திய மீனவர்களின் சட்டவிரோத இழுவைப் படகு தொழில் நடவடிக்கையை தடுத்து நிறுத்துமாறு கோரி வரும் 27 ஆம் திகதியன்று யாழ் நகரில் போராட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளதாக தீவக கடற்றொழில் அமைப்பு அறிவித்துள்ளது.

தீவக கடற்றொழில் அமைப்புக்களான மண்டைதீவு, நெடுந்தீவு, நயினாதீவு, எழுவைதீவு, வேலணை, புங்குடுதீவு உள்ளிட்ட கடற்றொழில் அமைப்புக்கள் ஒன்றிணைந்து போராட்டத்தை முன்னெடுக்க உள்ளோம்.

அதனடிப்படையில் எதிர்வரும் 27ஆம் திகதி நடைபெறும் போரட்டம் யாழ் பண்ணையில் உள்ள கடல்வள நீரியல் திணைக்களம் முன்பாக ஆரம்பித்து ஆளுநர் அலுவலகம் வரை ஊர்வலமாக செல்லவுள்ளது. அத்துடன் ஜனாதிபதிக்கு மகஜர் ஒன்றும் வழங்கவுள்ளோம்.

எமது இந்தப் போராட்டத்துக்கு யாழ் மாவட்ட கடற்றொழில் அமைப்புக்கள் தமது முழுமையான ஒத்துழைப்பு வழங்கி போராட்டத்தை வலுவூட்டுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Related Articles