25
நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள முறைப்பாடுகள் குறித்து ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை நாடாளுமன்ற வரப் பிரசாதங்கள் பற்றிய குழுவுக்கு அனுப்படும் என சபாநாயகர் அறிவித்துள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவின் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகள் தொடர்பில் விசாரணை செயற்பாடுகள் குறித்து தமக்கு மேற்கொள்வதற்காக மூவரடங்கிய குழுவொன்றை நியமித்துள்ளதாக சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன இன்று சபையில் அறிவித்தார்.
அதன்படி, குழுக்களின் பிரதி தலைவர் ஹேமாலி வீரசேகர தலைமையிலான இந்த குழுவில் விஜித ஹேரத் மற்றும் ரஞ்சித் மத்தும பண்டார ஆகியோர் அடங்குகின்றனர்.
இதன்படி, குறித்த குழுவின் அறிக்கை நாடாளுமன்ற வரப்பிரசாதங்கள் பற்றிய குழுவுக்கு அனுப்பப்படும் என சபாநாயகர் அறிவித்தார்.