Home யாழ்ப்பாணம் ஜால்ரா ஆளுநர்?

ஜால்ரா ஆளுநர்?

by ilankai

வடக்கின் கிளிநொச்சி மாவட்டத்திற்குட்பட்ட பூநகரியின் வாடியடியினை நகரமயமாக்க ரணில் விக்கிரமசிங்காவால் ஒதுக்கப்பட்ட 500 மில்லியன் நிதி அனுர அரசால் ஒரு சதமும் செலவின்றி திருப்பப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வாக்குறுதியளித்தவாறு, நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட வரவு செலவுத் திட்டத்தில் வடக்கு மாகாணத்துக்கு பல்வேறு திட்டங்களுக்கு பெருமளவு நிதி ஒதுக்கியமைக்கு, வடக்கு மக்கள் சார்பாக நன்றிகளைத் தெரிவித்துக்கொள்வதாக, வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவிததுள்ளார்.

வடக்கு மாகாண உள்ளூராட்சி அமைச்சின் திட்டமீளாய்வு கலந்துரையாடல் ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்றபோதே ஆளுநர் தனது பாராட்டு பத்திரத்தை வாசித்துள்ளார்.

இதனிடையே முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் ூநகரியின் வாடியடியினை நகரமயமாக்க ஒதுக்கப்பட்ட நிதி தொடர்பில் ஆளுநர் அறிந்துள்ள போதும் திருட்டு மௌனத்தை காத்துவருவதாக வாடியடி பொது அமைப்புக்கள் போர்க்கொடி தூக்கியுள்ளன.

Related Articles