Home மன்னார் மன்னார்:கனியாத இலவம் பழம்!

மன்னார்:கனியாத இலவம் பழம்!

by ilankai

மன்னார் தீவில் கனிய வள அகழ்விறகான ஆய்வு மீண்டும் மக்கள் எதிர்ப்பினால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.

முன்னதாக இலங்கை மத்திய சுற்றாடல் அதிகார சபையின் தலைமையில் சுமார் 23 திணைக்களங்கள் கள விஜயத்தை மேற்கொண்டு கணிய மணல் அகழ்வுக்கான சுற்றுச்சூழல்  ஆய்வு அறிக்கையை வழங்க மன்னார்  கொன்னையன் குடியிருப்பு பகுதிக்கு கடந்த  இரண்டு தடவைகள் வருகை தந்து இறுதியில் எவ்வித நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படாத நிலையில் குறித்த குழுவினர் திருப்பி அனுப்பப்பட்டனர்.

இந்நிலையில் கடந்த திங்கட்கிழமை மணல் அகழ்வுக்கு எதிராக போராட்டத்தை முன்னெடுப்பவர்களுக்கு எதிராக மன்னார் நீதிமன்றத்தில் தடை உத்தரவு பெற்றுக் கொள்ளப்பட்டிருந்தது.

இந்நிலையில் இன்று புதன்கிழமை(19) காலை மத்திய சுற்றாடல் அதிகார சபையின் அலுவலர்கள் தலைமையில் சுமார் 23 திணைக்கள அதிகாரிகள் மக்களின் காணிகளின் ஊடாக தனியார் காணியில் கணிய மணல் பரிசோதனைக்கான கள விஜயத்தை மேற்கொண்டிருந்தனர்.

எனினும் இன்றும் பொதுமக்கள்; தொடர்ந்தும் எதிர்ப்பை தெரிவித்து மறியலில் ஈடுபட்டனர்.அதன் தொடர்ச்சியாக ஆய்வு பணிகள் இன்றைய தினமும் தடுத்து நிறுத்தப்பட்டிருந்தது.

Related Articles