20
போப் பிரான்சிஸ் ஒரு சிக்கலான மருத்துவ சூழ்நிலையை எதிர்கொள்வதாகவும், தற்போதைக்கு ரோமின் ஜெமெல்லி மருத்துவமனையில் தங்கியிருப்பார் என்றும் வத்திக்கான் உறுதிப்படுத்தியது.
சமீபத்திய நாட்களிலும் இன்றும் அவருக்கு மேற்கொள்ளப்பட்ட சோதனைகளின் முடிவுகள் சுவாசக் குழாயில் பாலிமைக்ரோபியல் தொற்று இருப்பதைக் காட்டுகின்றன என அறிக்கை சுட்டிக்காட்டியது.
அவர் தொடர்ந்து சிகிற்சை எடுப்பதற்காக மருத்துவமனையில் தங்குவது அவசியம் என்பதையும் அவரின் உடல்நிலை சீராக இருப்பதையும் அந்த அறிக்கை உறுதிப்படுத்தியது.
88 வயதான பிரான்சிஸ், தனது உடல்நலக்குறைவு காரணமாக ஏற்கனவே பல நிகழ்ச்சிகளை ரத்து செய்ய வேண்டியிருந்தது , இது 2023 ஆம் ஆண்டில் நிமோனியா தாக்குதலால் ஏற்பட்டதை விட நீண்ட காலம் மருத்துவமனையில் இருந்து சிகிற்சை எடுக்க வைத்திருந்தது.