இலங்கையின் வரவு செலவுத் திட்டத்தில் இம்முறையும் அதிகரித்த தொகையாள 11 வீதமானதை இராணுவத்திற்காக ஒதுக்கியிருப்பது நாட்டினுடைய பொருளாதார வளர்ச்சிக்கு உகந்ததல்ல.அதனை தமிழரசுக்கட்சி எதிர்ப்பதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.
வரவு செலவு ஒதுக்கீட்டில் பாதுகாப்புச் செலவாக மொத்த வரவு செலவுத் திட்டத்திலே கிட்டத்தட்ட 11 வீதத்தை ஒதுக்கப்பட்டுள்ளது.நாட்டிலே யுத்தம் இல்லை, சண்டை இல்லை, ஆயுதங்களுடைய சரசரப்புக்கள் இல்லை ஆனால் 442 பில்லியன் ரூபாக்கள் பாதுகாப்பிற்காக ஒதுக்கப்பட்டுள்ளது.
நாட்டிலே இன்னும் பல மக்கள் குடியேற்றப்படவில்லை, மக்களுடைய காணிகள் விடுவிக்கப்படவில்லை, தமிழர் நிலங்கள் அபகரிக்கப்பட்ட நிலையிலேயே இராணுவ பிரசன்னங்களோடு மிதமிஞ்சிய இராணுவ ஆளணியோடு இருக்கின்ற இலங்கை 11 வீதமானதை இராணுவத்திற்காக ஒதுக்கியிருப்பது நாட்டினுடைய பொருளாதார வளர்ச்சிக்கு உகந்ததல்ல. நாட்டினுடைய பொருளாதாரம் வளரவேண்டுமென்றால் இங்கிருக்கின்ற இனங்களுக்கிடையில் ஒற்றுமை பலமாக்கப்பட வேண்டும்.” என சிவஞானம் சிறீதரன்; தெரிவித்துள்ளார்.