19
ஆதீரா Tuesday, February 18, 2025 இலங்கை
கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் 15 வயது சிறுவன் எஹெலியகொட பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
2025 ஆம் ஆண்டு ஜனவரி 17 ஆம் திகதி, எஹெலியகொட பொலிஸ் பிரிவின் ஹொரகொட வீதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொல்லப்பட்ட நிலையில் இரண்டு பேர் படுகாயமடைந்தனர்.
சம்பவம் தொடர்பில் எஹெலியகொட பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வந்த நிலையில் 15 வயது சிறுவனை கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சிறுவனிடம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்
Related Posts
இலங்கை
Post a Comment