Home இலங்கை மாணவர்களை வெயிலில் விட வேண்டாம்

மாணவர்களை வெயிலில் விட வேண்டாம்

by ilankai

பாடசாலை மாணவர்களை வெயிலில் வெளியே விட வேண்டாம் எனவும், தற்போது நிலவும் வெப்பமான வானிலையால் மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்பட கூடாது என கல்வி அமைச்சின் செயலாளர் நாலக களுவெவ தெரிவித்துள்ளார்.

இல்லங்களுக்கு இடையேயான விளையாட்டுப் போட்டிகளை நடத்துவது குறித்த வழிகாட்டுதல்களை உள்ளடக்கிய ஒரு சுற்றறிக்கையை அமைச்சகம் வெளியிடும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், சுற்றறிக்கை வெளியிடுவதற்கு முன்பு சுகாதார நிபுணர்களின் ஆலோசனையைப் பெறுவோம். தற்போது நிலவும் வெப்பமான சூழ்நிலை காரணமாக பாடசாலை விளையாட்டுப் போட்டிகளின் கால அளவைக் குறைக்க வேண்டியிருக்கும் என்று மேலும் தெரிவித்துள்ளார்.

Related Articles