Home கிளிநொச்சி சிறீதரனிற்கும் தேர்தல் பயம்?

சிறீதரனிற்கும் தேர்தல் பயம்?

by ilankai

தேர்தல் தோல்வி அச்சங்காரணமாக எதிர்கட்சிகள் தேர்தல்களை பிற்போ கோருவதாக ஆட்சியாளர்கள் கேலி செய்துவருகின்றனர்.

இந்நிலையில் எதிர்வரும் ஏப்ரல் மாதத்தில் நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலை பின்போடுமாறு நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அநுர அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஏப்ரல் மாதத்தில் தேர்தலை நடத்துவது என்பது தம்மை பொறுத்தவரை நெருக்கடியாக இருக்கும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

அதற்கான காரணம் என்னவெனில், ”சாதாரண தரப் பரீட்சை, வரவு செலவுத் திட்ட விவாதங்கள் மற்றும் உயிர்த்த ஞாயிறு போன்ற சமய நிகழ்வுகள் குறித்த காலப்பகுதியில் வருவதால் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தேர்தல் பிரசார பணிகளில் ஈடுபதில் சிரமத்தை ஏற்படுத்தும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

அத்துடன் தேர்தல் திருத்தங்களில் பெண்கள் மற்றும் இளைஞர்களுக்கு வழக்கப்பட்டுள்ள சந்தர்ப்பம் குறித்து மகிழ்ச்சி அடைவதாகவும், பெண்களுக்கு 25 வீதம் வழங்கப்பட்டுள்ளமை பாராட்டத்தக்கது என்றும் குறிப்பிட்டார்.

இதனிடையே உள்ளுராட்சி சபை தேர்தலை எதிர்கொள்ள ஏதுவாக எம்.ஏ.சுமந்திரன் தமிழரசுக்கட்சியின் செயலாளர் கதிரையை நேற்று கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

.

Related Articles